சூரியிடம் நில மோசடி வழக்கு! விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு! நீதிமன்றம் அதிரடி!

By manimegalai aFirst Published Oct 28, 2020, 6:02 PM IST
Highlights

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது கடந்த சில வாரங்களுக்கு முன் நில மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். 

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது கடந்த சில வாரங்களுக்கு முன் நில மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும். அதற்க்கு பதிலாக, சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் தரவேண்டும் என்றும் விஷ்ணு விஷாலின் தந்தை கூறியதாக தெரிகிறது.

ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள விஷ்ணு விஷால் தனது தரப்பு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது என்றும், சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்பதையும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். 

இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ்... தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், நடிகர் சூரி... விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என சூரி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த சென்னை உயர் நீதி மன்றம், சூரி தரப்புக்கு தடை இல்லை என்றும், இந்த வழக்கை நவம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

click me!