கொரோனாவிலிருந்து மீண்டார் பிரித்விராஜ்... குஷியான ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 28, 2020, 06:02 PM IST
கொரோனாவிலிருந்து மீண்டார் பிரித்விராஜ்... குஷியான ரசிகர்கள்...!

சுருக்கம்

தற்போது தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான பிரித்விராஜ் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளார்.   

​கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அமிதாப் பச்சன், தமன்னா, நிக்கி கல்ராணி, இயக்குநர் ராஜமெளலி, டாக்டர் ராஜசேகர் குடும்பத்தினர் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளனர். தற்போது தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான பிரித்விராஜ் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளார். 

பிளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் மலையாள படமான ஆடுஜீவிதம் படத்திற்காக மொத்த குழுவும் ஜோர்டான் பாலைவனத்திற்கு சென்று கிட்டதட்ட 3 மாதங்கள் அங்கு சிக்கித்தவித்தது. கொரோனா நெருக்கடியால் திடீரென விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் மொத்த குழுவும் பாலைவனத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இதையும் படிங்க: விஜயதசமி பூஜையை அவமதித்த “இரண்டாம் குத்து” படக்குழு... படுமோசமாக சித்தரித்து போட்டோ வெளியீடு...!

அதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய தனி விமானம் மூலமாக ஓட்டுமொத்த படக்குழுவும் கடந்த மே மாதம் 22ம் தேதி நல்ல படியாக வீடு கொச்சி திரும்பியது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகே பிரித்விராஜ் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி தனக்கு கொரோனா பாசிட்டிவ் என பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் பூரண குணமடைய வேண்டுமென திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறினர். 

 

 

பிரித்விராஜ் மலையாளத்தில் ஜன கண மண என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் முதலில் இயக்குநருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ப்ரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்போட்டோஸ்!

தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவ அறிக்கையுடன் பதிவிட்டுள்ள பிரித்விராஜ், ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்துவிட்டது. ஒரு வாரம் மட்டும் குவாரண்டைனில் இருந்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்புவேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!