சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைக்கப்பட்டதை கண்டு பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷாலின் பதிவிற்கு, தற்போது மோடி ஜி அவர்கள் பதில் கொடுத்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள, காசி விஸ்வநாதர் கோவில்... சமீபத்தில் ரூபாய் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க ப் பட்டது. இதை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் பாதை வரை சுமார் 320 கிலோமீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் எவ்வித கூட்ட நெரிசலும் இன்றி, பக்தர்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு மையங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, வந்த நடிகர் விஷால் பார்த்து வியந்தது மட்டுமின்றி, காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க உத்தரவிட்டு, ரூபாய் 800 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருந்தார்.
மேலும் செய்திகள்: மோசமான பிகினி உடையில்... கவர்ச்சி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்! மாலத்தீவை சூடேறிய ஹாட் போட்டோஸ்!
மேலும் செய்திகள்: Tamannaah: கையில் ஹாண்ட் பேக்குடன்... ரெட் ரோஸ் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் தமன்னா..!
இது குறித்து அவர் போட்டு இருந்த பதிவில், "அன்புள்ள மோடி ஜி நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள். எவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: 'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கு நடந்த வளைகாப்பு..! நிறைமாத நிலவாக மஞ்சள் சேலையில் ஜொலிக்கும் போட்டோஸ்!
மோடியை டேக் செய்து இவர் போட்டிருந்த பதிவை கண்ட பிரதமர் மோடி, சில நிமிடங்களுக்கு முன் நடிகர் விஷாலுக்கு பதில் கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்... "காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த பதிவு விஷால் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. காசியில் மிகவும் அற்புதமான தரிசனம் கண்ட அனைத்து பக்தர்களும், நெட்டிசன்களும் பிரதமரை புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi)மேலும் செய்திகள்: Yogi Babu Meet Vijayakanth Video:கேப்டன் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு..! வைரலாகும் வீடியோ..!