பாகிஸ்தானிலும் ஒரு ரஜினி... அச்சு அசல் சூப்பர்ஸ்டார் போல் தோற்றம் கொண்ட நபரின் வீடியோ வைரல்

Published : Nov 02, 2022, 03:31 PM IST
பாகிஸ்தானிலும் ஒரு ரஜினி... அச்சு அசல் சூப்பர்ஸ்டார் போல் தோற்றம் கொண்ட நபரின் வீடியோ வைரல்

சுருக்கம்

பாகிஸ்தானில் தாசில்தாராக பணியாற்றி வரும் ஒருவர், அச்சு அசல் ரஜினிகாந்த் போல் இருப்பதை பார்த்து அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலான நடிப்புக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 70 வயதை கடந்துவிட்டாலும் இன்றும் கோலிவுட்டில் செம்ம பிசியான நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தற்போது வரை 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இப்படத்துக்கு பின்னர் லைகா நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ரஜினி. இதனால் 2023 முழுவதும் ரஜினி செம்ம பிஸி என்று தான் சொல்ல முடியும். இந்நிலையில், ரஜினிகாந்த் போல் தோற்றம் கொண்ட ஒருவர் பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்...  சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய வடிவேலு... 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி..!

அவரது பெயர் ரெஹ்மத் கெஸ்கோரி, தாசில்தாராக பணியாற்றி வரும் அவர் அச்சு அசல் ரஜினிகாந்த் போல் இருப்பதை பார்த்து அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர். அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. படையப்பா படத்தில் ரஜினி எப்படி இருந்தாரோ அதே போல் தற்போது காட்சியளிக்கிறார் ரெஹ்மத் கெஸ்கோரி.

அவர் பேமஸ் ஆனதை அடுத்து பாகிஸ்தான் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே தனது ஆசை என்று அவர் கூறி உள்ளார். ஏற்கனவே மிஸ்டர் பீன் போல் ஒருவர் பாகிஸ்தானில் இருப்பது சமீபத்தில் தெரிய வந்த நிலையில், தற்போது ரஜினி போல் இருக்கும் நபரின் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... 3 வருடத்தில் முடிவுக்கு வந்த காதல்... காதலனை பிரேக் அப் செய்து பிரிந்தார் வலிமை நாயகி...!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே ஒரு போன் கால் சாமி மாதிரி வந்து காப்பாற்றிய கார்த்திக்!
பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?