மீராமிதுன் பேயாக நடித்துள்ள, 'பேய காணோம்' திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ள... இந்த படத்தின் டிக்கெட்டில் தள்ளுபடி வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.
குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் பேயகாணோம். இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன நிலையில் பேயகாணோம் திரைப்படத்தைப் பார்த்த Hi Creators நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.
பேயகாணோம் படம் விரைவில் திரைக்கு வந்து மக்களை மகிழ்ச்சி படுத்தும் எனவும், நல்ல காமெடியான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 60% தள்ளுபடியும் இரண்டாம் நாள் 40% தள்ளுபடியும் செய்து டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை வினியோகஸ்தர்களிடமும் , திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators நிறுவனத்தினர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல... விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்
இது என் கொடி பறக்கும் நேரம் என்ற பாடலை , செந்தில்கணேஷ் , ராஜலெட்சுமி மற்றும் கெர்ஷோமும் சுடு காட்டுலதான் இருப்பேண்டி நடு சாமத்துல வருவேண்டி என்ற பாடலை வேல்முருகனும் பாடியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் hi creators யூ டியூப் சேனலில் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: தனலட்சுமிக்கு ரவுண்டு கட்டி அட்வைஸ் கொடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்... காரணம் என்ன? - அனல்பறக்கும் புரோமோ இதோ
இந்த படத்தில், மீரா மிதுனை தவிர, முக்கிய வேடத்தில்...கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் தருண்கோபி நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை, மிகவும் காமெடியாக ஒரு பேயை தேடுவதை மையப்படுத்தி இயக்கியுள்ளார் இயக்குனர் அன்பரசன். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: ஈஃபில் டவர் முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்
இந்த படத்தின் பாதிலேயே மீராமிதுன் சொல்லாமல் கொள்ளமல் எஸ்கேப் ஆனதால்... இந்த படத்தின், கிளைமேக்ஸ் காட்சி முற்றிலும் மாற்றி எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த படத்தின, படத்தின் பாதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து, அவர் தவறாக பேசியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இவர், மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாமல் தலைமறைவான மீரா மிதுனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் மீராமிதுன் பேயாக நடித்திருக்கும், திரைப்படம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் வெளியான பின்னர்... இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.