'பொன்னியின் செல்வன் 2' புரோமோஷனை துவங்கிய லைகா..! வெளியானது புதிய வீடியோ..!

Published : Mar 01, 2023, 01:26 PM IST
'பொன்னியின் செல்வன் 2' புரோமோஷனை துவங்கிய லைகா..! வெளியானது புதிய வீடியோ..!

சுருக்கம்

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் புதிய புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  

தென்னகத்தை ஆண்ட, மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இதற்கு முன்னர் இக்கதையை படமாக்க எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற பல ஜாம்பவான்கள் முயற்சி செய்த போதும்.. முடியாமல் போன நிலையில், இதனை சாத்தியமாக்கி காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். 

இப்படத்தில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் 500 கோடிக்கு மேல் கல்லா கட்டியது. இரு பாகத்தையும் 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்த லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு இப்படம் முதல் பாகத்திலேயே போட்ட தொகையை பெற்றுக் கொடுத்தது.

துணிவு படத்தில் நடிக்க... லட்சத்தில் அல்ல கோடியில் சம்பளம் வாங்கிய மஞ்சு வாரியர்! எவ்வளவு தெரியுமா?

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ரிலீஸ் தேதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியது. மேலும் இப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கி உள்ளது லைகா நிறுவனம். தற்போது இப்படத்தில் நடித்த ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி, விக்ரம், படப்பிடிப்பின் போது பேசிய மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சி? இது தான் டைட்டிலா..!

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, குழப்பத்தை தீர்க்கும் விதமாக ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகும் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், கிஷோர், பிரபு, சரத்குமார், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

யாருக்கும் தொந்தரவு தர கூடாது! சமையல்காரராக மாறி நடிப்பை கற்றுக்கொண்ட நம்பியார்.! பலருக்கு தெரியாத அரிய தகவல்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!