சுடசுட ஆந்திரா தோசை... இன்னைக்கு ஒரு புடி...! வைரலாகும் கில்லி நடிகரின் ரோட்டுக்கடை வீடியோ

By Ganesh A  |  First Published Mar 1, 2023, 12:53 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி என பான் இந்தியா நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.


இந்தி நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, கடந்த 1990-களில் இருந்து  நடித்து வருகிறார். இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருந்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது தமிழ் படங்கள் தான். நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியை தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் தரணி தான். இவர் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்த தில் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார் ஆஷிஷ் வித்யார்த்தி.

இதையடுத்து பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் போன்ற தமிழ்படங்களில் தொடர்ந்து வில்லனாக மிரட்டிய இவருக்கு, திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது கில்லி தான். தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையாக நடித்திருந்தார். அதுவரை வில்லனாக மிரட்டி வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, அப்படத்தில் காமெடியிலும் தூள் கிளப்பி இருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... எப்ப பாரு அதே கேள்வி தானா... ஏன் உயிரவாங்குறீங்க? - ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வியால் கடுப்பான ஓவியா

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி என பான் இந்தியா நடிகராக வலம் வந்துகொண்டிருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம பாப்புலராக இயங்கி வருகிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிக இடங்களுக்கு பயணிக்கும் அவர், ஆங்காங்கே உள்ள சிறு சிறு உணவகங்களில் சுவைத்து அதை வீடியோவாக வெளியிடுவார்.

அப்படி சமீபத்தில் ஆந்திராவில் உள்ள குக் கிராமம் ஒன்றில் அமைந்துள்ள சின்ன ஓட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, அங்கு சுட சுட தோசை வாங்கி சுவைத்து, அங்குள்ள வடையும் அருமையாக இருந்ததாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். சிறு தொழிலை ஆதரிக்கும் வகையில் ஆஷிஷ் வித்யார்த்தி இதுபோன்று செய்து வருகிறார். அவரின் இந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வைகளைப் பெற்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... 66 வயது நடிகருக்கு 30 முறை கிஸ் கொடுத்து... அன்லிமிடட் கவர்ச்சியால் மிரட்டிய பொன்னியின் செல்வன் நடிகை

click me!