சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பரும்... தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு, ஒரு நாளுக்கு முன்பாகவே பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் நாளை தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதை முன்னிட்டு திமுக கட்சியை சேர்ந்த தொண்டர்கள், இவருடைய பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகக் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் மு க ஸ்டாலின் அவர்களின் போஸ்டர், பேனர் மற்றும் ஏழை மக்களுக்கு அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலர் ஒரு நாளைக்கு முன்பாகவே தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை, சமூக வலைதளம் மூலம் தெரிவிக்க துவங்கி விட்டனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளைக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ள மு க ஸ்டாலினுக்கு இன்றைய தினமே வீடியோ மூலம் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "என்னுடைய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் இருந்து, மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70-ஆவது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன். என பேசி உள்ளார். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள்.
ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! அதிர்ச்சியோடு.. அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய புகைப்படம்..!
வழக்கம்போல் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.