மதுவுக்கு எதிரான படங்கள் அதிகம் வரவேண்டும்! 'மாவீரன் பிள்ளை' படம் பார்த்துவிட்டு பாமக ராமதாஸ் பாராட்டு!

Published : Apr 24, 2023, 11:53 PM IST
மதுவுக்கு எதிரான படங்கள் அதிகம் வரவேண்டும்! 'மாவீரன் பிள்ளை' படம் பார்த்துவிட்டு பாமக ராமதாஸ் பாராட்டு!

சுருக்கம்

பல வருடங்களாக மதுவுக்கு எதிராக போர் கொடி உயர்த்தி வரும், பாமக நிறுவனர் ராமதாஸ், வீரப்பனின் மகள் விஜய லட்சுமி நடித்துள்ள 'மாவீரன் பிள்ளை' படத்தை பார்த்துவிட்டு மனதார வாழ்த்தியுள்ளார்.  

மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் அதிகரித்து வரும் நிலையில், மதுவினால் ஏற்படும் அவலத்தை குறித்தும் மதுவிற்காக போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் ஒரு அருமையான விழிப்புணர்வு படமாக தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாவீரன் பிள்ளை.

KNR ராஜா தயாரித்து, இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சாண்டல் வுட் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ராதாரவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராம் சரண் மனைவி உபாசனாவுக்கு நடந்த வளைகாப்பு! பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!

சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பு போராட்டங்களை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் ஐயா அவர்கள் இந்த படம் பற்றி கேள்விப்பட்டு இந்த படத்தை பார்த்தார். 

தவறான பழக்கத்தால் சீரழிந்த ஸ்ரீதேவியின் தாய்! தினமும் மகளையும் பாழாக்கிய பரிதாபம்? அதிர வைத்த பிரபலம்!

படம் பார்த்து முடித்ததும் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த திரு ராமதாஸ் அவர்கள், “மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி தான்.. சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியானால், குற்றங்கள் குறையும்.. தமிழகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்று பாராட்டியுள்ளார். அவரது இந்த பாராட்டை தொடர்ந்து மாவீரன் பிள்ளை படக்குழுவினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?