தீபாவளியை குறிவைத்த சிவகார்த்திகேயனின் 'அயலான்'! மாஸ் காட்டும் கிலிம்ஸி வீடியோவை வெளியிட்ட படக்குழு!

By manimegalai a  |  First Published Apr 24, 2023, 9:24 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என, புதிய கிலிம்ஸி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.
 


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று 'அயலான்'. வேற்றுகிரக வாசிகளை மையமாக வைத்து, இயக்குனர் ஆர். ரவி குமார் இயக்கத்தில், இப்படம் உருவாகியுள்ளது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் 'அயலான்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு, வெளியாக உள்ளதாக கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டு, அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்து, KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில்  "இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. "அயலான்" திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ஆதித்த கரிகாலன் - நந்தினியின் அழகிய காதல் சொல்லும் சின்னசிறு நிலவே ''பொன்னியின் செல்வன் 2" பாடல் இதோ!

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்." என தெரிவித்திருந்தார்.

தவறான பழக்கத்தால் சீரழிந்த ஸ்ரீதேவியின் தாய்! தினமும் மகளையும் பாழாக்கிய பரிதாபம்? அதிர வைத்த பிரபலம்!

குழந்தை விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு! இது போதும்.. செம்ம குஷியில் பிக்பாஸ் ரக்ஷிதா போட்ட பதிவு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் ‘அயலான்’ , குழந்தைகளை அதிகம் கவரும் விதமான ஒரு படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், சற்று முன் மாஸான கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

click me!