என்ன ஆச்சு? திடீர் என விஜய் டிவி 'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்த கோபி..!

By manimegalai a  |  First Published Apr 24, 2023, 6:12 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து கோபியாக நடித்து வரும் சதீஷ், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது... ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 


முயற்சி என்பது இருந்தால், ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்... அதற்க்கு வயது, குடும்பம் எல்லாம் ஒரு தடையே இல்லை என்கிற கருத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கிய லட்சுமி'. 1000 எபிசோடுகளை கடந்து, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த சீரியல், முதல் முதலில் மராத்தி மொழியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார் பரிவார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிவிதமான வரவேற்பை தொடர்ந்து, தெலுங்கில் ஸ்டார்மா தொலைக்காட்சியிலும், இதை தொடர்ந்து மலையாளத்தில், ஏசியாநெட் தொலைக்காட்சியிலும் ரீமேக் செய்து ஒளிபரப்பானது. பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் விஜய் டிவி தொலைக்காட்சியில் 'பாக்கியலட்சுமி' சீரியல் துவங்கப்பட்டது. முதல் நாளில் இருந்து இப்போதுவரை, தமிழில் 'பாக்கிய லட்சுமி'  சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

Tap to resize

Latest Videos

குழந்தை விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு! இது போதும்.. செம்ம குஷியில் பிக்பாஸ் ரக்ஷிதா போட்ட பதிவு

இந்த சீரியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது கோபியின் கதாபாத்திரம் தான். நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா.. என பல சமயங்களில் கோபி ரசிகர்களை யோசிக்க வைத்து விடுவார். அப்பாவித்தனமான முகத்தை வச்சிக்கிட்டு பண்றது எல்லாம் வில்லங்கமான விஷயங்களை தான். பயந்த புள்ள மாதிரியே நடிச்சு... எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை ஸ்கோர் செய்து விடுவார். ஏற்கனவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சில தகவலைகள் வெளியான போது, அதற்கு கோபி மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?

இதுகுறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வெளியிட்டுள்ள தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம்... நான் சொல்லப்போறது, நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம், போன்றவற்றை வர வைக்கலாம்.  கஷ்டமா இருக்கு, இருந்தாலும் இதை செஞ்சு ஆகணும். இன்னும் கொஞ்ச நாட்களில், அதாவது இன்னும் பத்து பதினைந்து எபிசோடில்.. 'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சதீஷ் ஆகிய நான். கோபியா நடிச்சுக்கிட்டு இருக்கிற இந்த கேரக்டரை விட்டு நான் விலக காரணங்கள் பல இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் பர்சனல் காரணம். இந்த கோபி கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி. நானும் யாருக்கும், எந்த கஷ்டமும் கொடுக்காமல், எல்லோரும் பாராட்டும்படி என்னால் முடிந்தவரை சுமாராக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும், என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். இவருடைய பதிவு, இந்த சீரியல் ரசிகர்கள் மற்றும் சதீஷின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நந்தினியின் சதியே காரணம்..! கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' இன்ட்ரோ வீடியோ!

இந்த சீரியலில் பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை கே.எஸ். சுசித்ரா செட்டி நடித்து வருகிறார். மேலும் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். இரண்டு மனைவியை கட்டிக்கொண்டு படாத பாடு படும் கணவராக கோபி கதாபாத்திரத்தில் சதீஷ்குமார் நடிக்கிறார். மிகவும் பரபரப்பான கதைகளத்துடன் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் மொத்த சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!