இந்து மத பிரச்சனையால்... பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலிக்கப்போகுது - கொளுத்திப்போட்ட பார்த்திபன்

By Ganesh AFirst Published Oct 13, 2022, 3:16 PM IST
Highlights

இந்து மத சர்ச்சையால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மேலும் ரூ.100 கோடி வசூலிக்கும் என நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இயக்கிய திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.416 கோடி வசூலித்துள்ளது. இப்படம் 400 கோடி வசூலைக்கடந்ததை படக்குழுவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

விரைவில் இப்படம் கமலின் விக்ரம் பட சாதனையையும் முறியடிக்க உள்ளது. கமல் நடித்த விக்ரம் திரைப்படம் ரூ.426 கோடி வசூலித்து, இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சாதனையை முறியடித்துவிடும்.

இதையும், படியுங்கள்... படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு நேர்ந்த சோகம்..! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்..!

சமீபத்தில் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் என சித்தரிக்கப்படுவதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பேசுபொருள் ஆனது. இதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. பாஜகவினர் வெற்றிமாறனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். கமலோ அவர் சொன்னது சரிதான் எனக்கூறினார். அந்த காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. அதை அவர் சரியாக தான் சொல்லி உள்ளார் என வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

இந்நிலையில் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த நடிகர் பார்த்திபன், இந்து மத சர்ச்சையால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மேலும் ரூ.100 கோடி வசூலிக்கும் என டுவிட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார். அதில அவ்ர் பதிவிட்டுள்ளதாவது : “Crosses-400 Crores! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப  லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!” என பதிவிட்டுள்ளார். அவர் சொல்லியபடி நடந்தால் பொன்னியின் செல்வன் ரூ.500 கோடியை கடக்கும்போல தெரிகிறது.

Crosses-400
Crores!!!!
இந்து என்ற மதம்
இன்று
இந்து என்ற பிரச்சனையாக
மதம்மாறி விட்டது!
இந்த எழுத்தும் ஏதோ ஒரு
பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்!
எழு ப்பினால் …
இன்னும் ஒரு 100!

— Radhakrishnan Parthiban (@rparthiepan)

இதையும், படியுங்கள்... Video : சினிமாவில் ஓடும் ''பொன்னியின் செல்வன்'' கல்கியினுடையது அல்ல! - நடிகர் பார்த்திபன் கருத்து!

click me!