
நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கி முடித்த கையேடு பா.ரஞ்சித் யாரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என நடிகர் விக்ரமுடன் இணைய உள்ளதை உறுதி செய்தார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும், 'தங்கலான்' படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படம் மற்றும் அப்டேட் வெளியாகி வருகிறது.
இதுவரை தமிழில் சொல்லப்படாத கதையான, தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் இப்படம் ஒரு பீரியட் பிலிமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில், இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மிகப்பெரிய தாடி, மீசை, மற்றும் முடியுடன் வலம் வரும் விக்ரம்... சமீபத்தில் கூட ஒக்கேனக்கல் பகுதியில் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குனர் பா ரஞ்சித் உட்பட படக்குழுவினரோடு தண்ணீரில் குளித்து மகிழ்ந்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித், டிசம்பர் 8 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பில், நடிகர் விக்ரமுடன் இருக்கும் போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருவதோடு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.