நடிகை ஹன்சிகாவுக்கு, சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில்... திருமணத்திற்கு பின் முதல்முறையாக கணவர் சோஹைல் கதூரியாவுடன் நடிகை ஹன்சிகா ஜோடியாக கைகோர்த்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய ஹனிமூன் குறித்த தகவலையும் ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஹன்சிகா... சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் இவர்களுடைய திருமணம், டிசம்பர் 4 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனையில் நடந்து முடிந்தது. இதில் ஹன்சிகா, சோஹைல் கதூரியா, நண்பர்கள்... குடும்பத்தினர் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் முடிந்த கையோடு, நடிகை ஹன்சிகா தற்போது முதல் முறையாக கணவர் சோஹைல் கதூரியாவுடன் பொது இடத்திற்கு வந்தபோது, இவரிடம் ஹனி மூன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்துள்ள, ஹன்சிகா தற்போது தன் கைவசம் சில படங்கள் உள்ளதால், அந்த படங்களை முடிக்க வேண்டி உள்ளது. படப்பிடிப்புகளை முடித்த பின்னரே ஹனி மூன் செல்வது குறித்து முடிவு செய்துள்ளதாக ஷாக்கிங் பதில் கூறியுள்ளார்.
KGF பட நடிகர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!
மேலும், ஹன்சிகா திருமணத்தை தொடர்ந்து திரையுலகை விட்டு விலகுவதாக சில தகவல்கள் பரவிய நிலையில், இந்த தகவலை மறுத்த ஹன்சிகா... தொடர்ந்து, திரையுலகில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஹன்சிகா முதல் முறையாக கணவருடன் பொது இடத்திற்கு வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.