KGF படத்தில் நடித்திருந்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ், வயது மூப்பு மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி, உலக அளவில் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'KGF' திரைப்படத்தில், கண் தெரியாத வயதானவர் தோற்றத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா ஜி ராவ். இவர் பல கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள போதிலும், ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது என்றால் அது KGF திரைப்படம் தான்.
Chilla Chilla song Leaked: ஆன்லைனில் லீக்கான 'சில்லா சில்லா' பாடல்! அதிர்ச்சியில் துணிவு படக்குழு!
பல வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் கிருஷ்ணா ஜி ராவ், மறைந்த நடிகர் ஷங்கர் நாக்கிடம் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். KGF படத்தை தொடர்ந்து, தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கிய 'நானோ நாராயணப்பா' என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இப்படத்தில் நாராயணப்பாவாக ஸ்டைலிஷான தோற்றத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா ஜி ராவ்.
பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் இயக்குனர் பரபரப்பு புகார்!
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக அவதி பட்டுவந்த இவருக்கு... திடீர் என மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவரது குடும்பத்தினர்... இவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் கன்னட திரையுலகை சேர்ந்த பலரை வருத்தமடைய செய்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலன்கள்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.