தல அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில், அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. வாங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அஜித் நெகடிவ் ஷேடு கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த 'துணிவு' திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதுவரை ரிலீஸ் தேதி குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தளபதி விஜய்யின் 'வாரிசுக்கு' முன்பே இந்த படத்தை வெளியிட படக்குழு தயாராகியுளளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் ஒரு புறம், பரபரப்பாக நடந்து வரும் நிலையில், 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல், வரும் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.
இந்த பாடலை வரவேற்க படக்குழு, மிகவும் பரபரப்பாக தயாராகியுள்ள நிலையில்... 'சில்லா சில்லா' பாடல் 10 செகண்ட் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும் இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் அஜித் ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களில்... 'சில்லா சில்லா' பாடல் தற்போது திருட்டு தனமாக சில நொடிகள் வெளியாகி இருந்தாலும் இதனை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என, கூறி வருகிறார்கள். படக்குழுவினர், படம் குறித்த காட்சிகளோ... புகைப்படங்களோ திருட்டு தனமாக வெளியாக கூடாது என்பதில், மிகவும் கவனமாக இருந்தாலும், அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் இறங்கி பரபரப்பை ஏற்படுத்துவதும் மாறாத ஒன்றாக உள்ளது.