வளைகாப்பு முடிந்த கையோடு சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்... அதன் விலை இத்தனை லட்சமா?

By Ganesh A  |  First Published Dec 6, 2022, 10:45 AM IST

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தற்போது புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.


கேளடி கண்மனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில மாதத்திலேயே கர்ப்பமான திவ்யா, தனக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அவரது கணவர் அர்னவ்விற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் அர்னவ் தன்னை அடித்து உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் திவ்யா. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை திவ்யாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் இணைந்து வளைகாப்பு நடத்தினர். இதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் திவ்யா ஸ்ரீதர்.

இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதர் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதிநவீன வசதிகள் கொண்ட MG hector sharp cvt என்கிற மாடல் காரை தான் அவர் புதிதாக வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. புதிதாக கார் வாங்கி உள்ள நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ஓ2 முதல் கார்கி வரை... 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?

click me!