நடிகை நிவேதா பெத்துராஜ், காரை சோதனை செய்ய வந்த போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், ஜெயம் ரவி ஜோடியாக டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தார் நிவேதா பெத்துராஜ். நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயினாக இருந்தாலும் இவருக்கு கோலிவுட்டில் பெரியளவில் வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் டோலிவுட் பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த மெண்டல் மதிலோ, அலவைகுந்தபுரமுலு, ரெட் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இதனால் டோலிவுட்டில் ராசியான ஹீரோயினாக உருவெடுத்தார் நிவேதா பெத்துராஜ். தற்போது தமிழில் அவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. ஆனால் தெலுங்கில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.
இதையும் படியுங்கள்... BalaKrishna : குடிபோதையில் நடிகை அஞ்சலியிடம் அத்துமீறி நடந்துகொண்டாரா பாலகிருஷ்ணா? பரபரப்பை கிளப்பிய வீடியோ
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றி பல்வேறு சர்ச்சைகள் உலா வந்தன. அதற்கெல்லாம் பதிலடி கொடுத்த அவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் ஐதராபாத்தில் நிவேதா பெத்துராஜின் காரை சோதனை இட வேண்டும் என காவல்துறையினர் அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நிவேதா பெத்துராஜ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது.
அந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்வதை தடுத்து அவர் அடாவடி செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அது அவர் நடிப்பில் விரைவில் வெளி வர உள்ள தெலுங்கு படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று பலரும் கூறி வருகின்றனர். காரணம், அந்த வீடியோவில் போலீஸ் உடை அணிந்திருக்கும் நபர் காலில் செருப்புடன் நிற்பதை நோட் பண்ணிய நெட்டிசன்கள் அதை சுட்டிக்காட்டி இது நிச்சயம் புரமோஷன் தான் என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... என்னிடம் கேட்காமலே என் பாடல் வரிகளை பட தலைப்பாக பயன்படுத்துவதா? கவுதம் மேனனுக்கு செம்ம டோஸ் கொடுத்த வைரமுத்து