MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என்னிடம் கேட்காமலே என் பாடல் வரிகளை பட தலைப்பாக பயன்படுத்துவதா? கவுதம் மேனனுக்கு செம்ம டோஸ் கொடுத்த வைரமுத்து

என்னிடம் கேட்காமலே என் பாடல் வரிகளை பட தலைப்பாக பயன்படுத்துவதா? கவுதம் மேனனுக்கு செம்ம டோஸ் கொடுத்த வைரமுத்து

தன்னிடம் அனுமதி வாங்காமலே தனது பாடல் வரிகளை பட தலைப்புகளாக பயன்படுத்தி வருபவர்களுக்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளார் வைரமுத்து.

1 Min read
Author : Ganesh A
Published : May 30 2024, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja, vairamuthu

Ilaiyaraaja, vairamuthu

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தான் வைரமுத்துவும், இளையராஜாவும். இவர்கள் இருவர் கூட்டணி சில ஆண்டுகள் மட்டுமே இணைந்து பணியாற்றி இருந்தாலும் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அதன்பின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வைரமுத்துவும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றவே இல்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vairamuthu, gangai amaran

Vairamuthu, gangai amaran

இளையராஜா உடனான பிரிவுக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான் உடன் கூட்டணி அமைத்து பல்வேறு மறக்கமுடியாத பாடல்களை கொடுத்திருந்தார் வைரமுத்து. கடந்த சில மாதங்களாக வைரமுத்து - இளையராஜா இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இளையராஜா பாடல்களுக்கான முழு உரிமை இசையமைப்பாளருக்கு உள்ளதாக கூறியதற்கு, வைரமுத்துவும் பதிலடி கொடுத்திருந்தார். 

இதையும் படியுங்கள்... உருவாகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’; அம்மனாக நடிக்க மறுத்த நயன்... அவர் இடத்தை Replace செய்யப்போகும் நடிகை இவரா?

34
vairamuthu

vairamuthu

ஒரு பாடலுக்கு இசை எவ்வளவு முக்கியமோ, வரிகளும் அவ்வளவு முக்கியம், இதை புரிந்தவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி என விமர்சித்திருந்தார் வைரமுத்து. பின்னர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், வைரமுத்துவை எச்சரித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, தற்போது வைரமுத்து வேட்டைக்காரி பட ஆடியோ லாஞ்சில் பேசும்போது தன்னுடைய பாடல் வரிகள் பட தலைப்புகளாக வைக்கப்பட்டுள்ளது பற்றி பேசி இருக்கிறார்.

44
Gautham Menon, vairamuthu

Gautham Menon, vairamuthu

அதன்படி, அவர் பேசியதாவது : “நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகியவை எல்லாம் என்னுடைய பாடல் வரிகள் தான். அதை படத் தலைப்பாக்கியவர்கள் என்னிடம் சொல்லவோ அல்லது செல்போன் மூலம் அனுமதி கேட்கவோ இல்லை. இதற்கு ஜெயகாந்தன் சொன்னதை தான் நான் சொல்ல விரும்புகிறேன். இல்லாதவன் எடுத்துக்கொள்கிறான்” என இயக்குனர் கவுதம் மேனனை மறைமுகமாக சாடி பேசி இருக்கிறார் வைரமுத்து.

இதையும் படியுங்கள்... Kavin Salary : முதன்முறையாக நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்... அதற்கு அவர் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved