தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களை வைத்து... சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருது' என்கிற விருதை அறிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நித்தியானந்தா, தமிழகத்தில் இவரை பல பிரச்சனைகள் சூழ துவங்கியதால்... தனி தீவு ஒன்றை வாங்கி அங்கேயே குறியேறியதாக அறிவித்தார். கைலாசா என்று அந்த தீவுக்கு பெயர் வைத்தது மட்டும் இன்றி, கைலாசாவிற்கு நான் தான் அதிபர் என கூறி, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று உருவாக்கி உள்ளதாகவும் கூறினார். இவர் கூறிய பின்னர் பலர் கைலாசா செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்த போதும், யாருக்கும் அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தீவிர உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்து முகநூல் மூலம் மீண்டும் தரிசனம் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்த நிலையில், அதே விருது தற்போது இயக்குனர் பேரரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: Vishal Marriage: 45 வயதில் பிரபல நடிகையுடன் விஷாலுக்கு மலர்ந்த காதல்? விரைவில் திருமணமா.. தீயாய் பரவும் தகவல்!
மேலும் பேரரசுவை வாழ்த்தியும், இந்து மதத்திற்கு அவர் ஆதரவாக குரல் கொடுத்து வருவதை சுட்டி காணொளி ஒன்றியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளதாவது, "திரைப்பட இயக்குனர் பேரரசு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.. 'திருவண்ணாமலை' என்கிற பெயராலேயே மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்துள்ளீர்கள். உங்களுடைய ஹிந்து மத உணர்வு மற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும், இந்து மதத்திற்காக நீங்கள் களம் காணுவதும், நீங்கள் செய்யும் மிகப் பெரும் பணிகளை நன்கு அறிவேன். உங்களுடைய எல்லா திரைப்பட தலைப்புகளும் ஆன்மீகப் பெயர்களாகவும், ஆன்மீக ஸ்தலத்தின் பெயர்களாகவும், இருக்கும். சிவகாசி, திருவண்ணாமலை, பழனி, திருப்பதி என வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்து மதப் பணி மிகப் பெரிய பணி... அதற்காக தலைவணங்குகிறேன். உங்களுடன் என்றும் தோள் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மத பணிகளுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்".
மேலும் செய்திகள்: தேவலோக ரம்பை போல் மாறிய குட்டி நயன் அனிகா..! கண்ணாடி முன் அமர்ந்து... அழகை வெளிப்படுத்திய அசத்தல் போட்டோஸ்!
இயக்குனர் பேரரசுவுக்கு, நித்தியானந்தா வழங்கியுள்ள 'கைலாச தர்ம ரட்சகா விருது' குறித்த சான்றிதழ் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது .