Annapoorani First Look: பிக்பாஸ் லாஸ்லியா - லிஜோமோல் நடித்துள்ள 'அன்னபூரணி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

By manimegalai a  |  First Published Oct 25, 2022, 4:00 PM IST

லாஸ்லியா மற்றும் லிஜோ மோல் நடித்துள்ள, 'அன்னபூரணி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன், மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.
 


Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்னபூரணி”. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் மற்றும் பொன்னியின் செல்வன் பட நடிகர் ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.  கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம். 

மேலும் செய்திகள்: தீபாவளி ஸ்பெஷல்... கைகளை குத்த வைத்து குளுகுளு கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே..! ஸ்டன்னிங் ஹாட் போட்டோஸ்!

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார். 

ஜெயபீம் படத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஸ், மற்றும் பிக்பாஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன்.. துணிவு பட லுக்கில் அஜித் கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் போட்டோஸ்!
 

click me!