
தென்னிந்திய சினிமாவுலகில் சில ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நட்சத்திர தம்பதிகள் என்றால் அது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான். கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தற்போது இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். நானும் ரவுடிதான் படத்தளத்தில் ஏற்பட்ட காதல் ஏழு வருடங்கள் நீண்ட நிலையில் சமீபத்தில் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட செட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்தினம் என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு நட்சத்திர தம்பதிகளை வாழ்த்தினர். பிரபல இயக்குனராக வளம் வரும் விக்னேஷ்வனும், நயன்தாராவும் இணைந்து தங்களது காதல் சின்னமாக ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி சாதனை படைத்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்ற இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தது.
திருமணமான நான்கே மாதங்களில் திடீரென நயன்தாராவும் விக்னேஷ்வனும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த பல கேள்விகளும் இருந்தது நான்கு மாதத்தில் குழந்தை இரட்டை குழந்தை பெறுவதற்கு பல தடையில் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.
ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது. போன்ற சான்றிதழை விக்கி மற்றும் நயன் சமர்ப்பித்ததால் இந்த பிரச்சனை காத்தோடு மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தீபாவளியை தனது பிள்ளைகளுடன் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ்.. கையில் இரட்டை குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.