இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி..!

Published : Oct 24, 2022, 09:14 PM IST
இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி..!

சுருக்கம்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா  தம்பதி தங்களது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.  

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில், நான்கே மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது. திருமணமான நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் விதிகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாக சர்ச்சை எழுந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத்தாய் சட்டங்களுக்குட்பட்டுத்தான் குழந்தை பெற்றுக்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. 

இதையும் படிங்க - தளபதியின் மிரட்டல் போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்! விஜய்யுடன் மோதுவதை உறுதி செய்வாரா அஜித்?

பின்னர் தான், விக்னேஷ் சிவன் - நயன்தாரா  இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்துகொண்டதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பதிவு செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்கள் குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா  தம்பதி மகிழ்ச்சியாக இருந்துவருகின்றனர்.

இதையும் படிங்க - Suriya - Jyothika diwali wishes: ரசிகர்களுக்கு ஜோடியாக தீபாவளி வாழ்த்து கூறிய சூர்யா - ஜோதிகா.! வைரல் வீடியோ.!

தங்கள் குழந்தைகளுடனான முதல் தீபாவளியை விக்னேஷ் சிவ - நயன்தாரா  தம்பதி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதுடன், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோவும் பதிவிட்டனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?