கோலிவுட் திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து, தீபாவளி திருநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் , தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்', இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் '' மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில், இன்னும் பெயரிடாத படத்திலும் நடிக்க உள்ளார். அதே போல் ஜோதிகாவும், தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தி தான் ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் மம்மூடியுடன் நடிக்க உள்ள படம் குறித்த தகவலும் உறுதி செய்யப்பட்டது.
நடிப்பை தாண்டி கணவன் - மனைவி இருவருமே... 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் அடுத்தடுத்து சில வெற்றி படங்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள் தயாரிப்பில் வெளியான 'ஜெய்பீம்' , கார்கி, போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் சூர்யா தயாரிப்பில், நடித்து வெளியான, 'விருமன்' படம் வசூலில் கெத்து காட்டியது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்..! சண்டைக்கு மாஸ்டர் பிளான் போட்ட நியூ டாஸ்க்..!
இந்நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், அவர் நடிக்க உள்ள படங்களின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நேற்றைய தினம் கூட சூர்யா நடித்து வரும் 42 வது படத்தில், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும், ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படம் 3d முறையில் எடுக்கப்பட உள்ளதால், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நீண்ட காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: Samantha: ஓபன் நெக்கில்... முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு முட்டவைத்த சமந்தா..! வேற லெவல் ஹாட் போஸ்..!
இது ஒருபுறம் இருக்க சூர்யா - ஜோதிகா இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையில்.. ரசிகர்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சூர்யா மிகவும் பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்த வீடியோ தற்போது வெளியாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Happy happy Deepavali dear all! ✨ pic.twitter.com/U8DMRxpx4c
— Suriya Sivakumar (@Suriya_offl)