பிரபாஸ் ரசிகர்கள் செயலால் தீப்பிடித்து எறிந்த தியேட்டர்! உயிருக்கு பயந்து அங்கும் இங்கும் அலைமோதிய ரசிகர்கள்!

By manimegalai a  |  First Published Oct 24, 2022, 2:46 PM IST

பிரபாஸின் தீவிர ரசிகர்கள், அவரது படத்தை வரவேற்கும் விதமாக திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த போது தியேட்டர் தீப்பிடித்ததால் ரசிகர்கள் அங்கும் இங்கும் உயிருக்கு பயந்து அலைமோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


'' படத்திற்கு பின்னர், உலக அளவில் மிகவும் பிரபலமாகி விட்டபிரபாஸுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கூட ஹைதராபாத்தில் உள்ள இவருடைய வீட்டின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இவரது வெறித்தனமான ரசிகர்கள் செய்த செயல்தான் தற்போது விபரீதமாக மாறி திரையரங்கிற்கே உலை வைத்துள்ளது.

பொதுவாக ரசிகர்கள் தாங்கள் விரும்பும் ஹீரோவுக்காக, கட்டவுட், பால் அபிஷேகம், திரையரங்கம் வெளியே பட்டாசு வெடித்து, மேல தாளத்தோடு படத்தை வரவேற்பதை பார்த்துள்ளோம். ஆனால் இங்கு சில ரசிகர்கள் எல்லை மீறி சென்றுள்ளனர். இதனால் திரையரங்கமே தீ பிடித்து எரியும் நிலை உருவாக்கியது. ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராமன் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: Suriya - Jyothika diwali wishes: ரசிகர்களுக்கு ஜோடியாக தீபாவளி வாழ்த்து கூறிய சூர்யா - ஜோதிகா.! வைரல் வீடியோ.!

மேலும்  பில்லா படத்தை பார்க்க, திரையரங்கிற்கு வந்த இளம் ரசிகர்கள் சிலர்... திரையரங்கத்தில் உள்ளேயே பட்டாசு வெடித்துள்ளனர். அவர்கள் பட்டாசு பாக்ஸை பக்கத்திலேயே வைத்து கொண்டி பட்டாசு வெடித்தபோது,  பட்டாசின் தீப்பொறி அந்த பட்டாசு பாக்சிங் மேலே பட்டு, அதிலிருந்து பட்டாசுகள் அங்கும் இங்கும் வெடித்து சிதற துவங்கியது. குறிப்பாக ராக்கெட் போன்றவை திரைசீலையை நோக்கி சீறிப்பாய்ந்து பற்றி எறியதுவங்கியது. இதனால் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் உச்சகட்ட பதற்றத்தில், உயிர் பிழைத்தால் போதும் என அலை மோதிக்கொண்டு வெளியே வந்தனர்.

மேலும் செய்திகள்: Samantha: ஓபன் நெக்கில்... முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு முட்டவைத்த சமந்தா..! வேற லெவல் ஹாட் போஸ்..!
 

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் திரையரங்கு உரிமையாளர் தற்போது திரையரங்கத்திற்குள் பட்டாசு வெடித்த இளைஞர்களின் வீடியோ பதிவை கொண்டு, அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். மேலும் திரையரங்கிற்குள்ளே பட்டாசு வெடித்த காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபாஸின் ரசிகர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட சம்பவம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

No it’s not Diwali celebration ..It’s the madness of fans celebrating by burning a theatre while his film is running on the screen pic.twitter.com/lbYje0t356

— Ram Gopal Varma (@RGVzoomin)

 

click me!