ஓடிடி தளத்தில் ஆபாச படங்களுக்கு நெருக்கடி ..! அதிரடி காட்டும் மத்திய அரசு!

By manimegalai aFirst Published Feb 25, 2021, 3:34 PM IST
Highlights

ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப்சீரிஸ், மற்றும் திரைப்படங்கள், போன்றவற்றிக்கு புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப்சீரிஸ், மற்றும் திரைப்படங்கள், போன்றவற்றிக்கு புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியிடப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல்நல குறைவு..! மருத்துவமனையில் அனுமதி!
 

கொரோனா பிரச்சினைக்கு பின், தற்போது திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவை அதிக அளவில் இயக்கப்பட்டு ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. திரைப்படங்களுக்கு இருப்பது போல்  ஓடிடி தளங்களுக்கு சென்சார் இல்லாததால், 18 வயதுக்கு குறைவானவர்களும் அடல்ட் காட்சியை பார்ப்பதாக பலர் புகார் அளித்து வந்தனர்.

மேலும் வரைமுறை இன்றி, பாலிவுட் வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று வருகிறது.  இதை தொடர்ந்து தற்போது 13 , 16 , மற்றும் 18 என மூன்று வயதினருக்கு ஏற்ப படங்களை வகைப்படுத்தி தணிகை சான்றிதழ் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபாசம், மொழி, பாலினம், ஆகிய அடிப்படையில் படங்களை வகைப்படுத்த வேண்டும் என்றும். அரசு நீதிமன்றம் கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளம் தராவிட்டால் 5 ஆண்டு சிறை அல்லது அதற்க்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகையை கரம் பிடித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்..! குவியும் வாழ்த்து..!
 

மேலும் செய்திகள்: 'திரிஷ்யம் 2 '-வை பிரிச்சு மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்..! தமிழ் பட டைரக்டர்ஸ் பார்த்து திருந்துங்கப்பா என மெசேஜ்!
 

அதே போல், புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்கள், மற்றும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  சமூக வலைதளங்களை அவர்கள் வதந்திகள் பரப்புவதற்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!