புதிய கட்சி துவங்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்!

By manimegalai aFirst Published Feb 25, 2021, 12:57 PM IST
Highlights

இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட, நடிகர் மன்சூர் அலிகான் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
 

இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்ட, நடிகர் மன்சூர் அலிகான் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகையை கரம் பிடித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்..! குவியும் வாழ்த்து..!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல நடிகர் - நடிகைகள் தங்களை அரசியல் கட்சியில் இணைத்து கொண்டு அரசியல் பணிகளில் கவனம் செலுத்த ஆயத்தமாகியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்து விட்டதால், ரஜினியின் ஆதரவை பெற வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்: 'திரிஷ்யம் 2 '-வை பிரிச்சு மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்..! தமிழ் பட டைரக்டர்ஸ் பார்த்து திருந்துங்கப்பா என மெசேஜ்!
 

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  'தமிழ் தேசிய புலிகள் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு, வினோதமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்தாலும், குறைந்த வாக்குகள் பெற்றதால் தோல்வியை தழுவினார்.

ஆனால் தற்போது 'தமிழ் தேசிய புலிகள்' என்கிற கட்சியை துவங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் இவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பால் ரசிகர்கள் மனதில் வெற்றி கண்ட மன்சூர் அலிகான், தேர்தலிலும் வெற்றி காண்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!