Latest Videos

நாடக காதல்.. கொதிக்கும் நடிகர் ரஞ்சித்.. "சார் அப்போ உங்க கல்யாண வாழ்க்கை" - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

By Ansgar RFirst Published Jun 27, 2024, 9:54 PM IST
Highlights

Ranjith : பிரபல நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் தான் கவுண்டம்பாளையம். நாடக காதலை எதிர்த்து இந்த படத்தை அவர் இயக்கி வெளியிடவுள்ளார்.

இப்பொது 51 வயது நிரம்பிய பிரபல நடிகர் ரஞ்சித் அவர்கள் கடந்த 1993ம் ஆண்டு வெளியான "பொன்விலங்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழ் திரையுலகில் நல்ல பல படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 1998ம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் "மறுமலர்ச்சி" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்காக சிறந்த வில்லனுக்கான தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் அவர், கடந்து 2003ம் ஆண்டு வெளியான "பீஷ்மர்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் களமிறங்கினார். 

Indian 2: ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !

2015ம் ஆண்டு பிறகு தமிழ் மொழி திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்காமல் இருந்து வரும் ரஞ்சித், மலையாள மொழியில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அதேபோல தமிழ் மொழியில் சின்னத்திரையில் பல நாடகங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள "கவுண்டம்பாளையம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட உள்ளார் நடிகர் ரஞ்சித். 

இந்நிலையில் கடந்த சில காலமாகவே பெண்கள் பொது வெளியில் மாடனாக உடை அணிந்து செல்வதையும், "நாடகக் காதல்" என்கின்ற ஒரு விஷயத்தை முன்னிறுத்தியும் பல சச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரை தாக்கும் விதமாக நெட்டிசன்கள் பலர், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 1999ம் ஆண்டு அவர் நடித்த "நேசம் புதிது" என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு ப்ரியாராமனை ரஞ்சித் விவாகரத்து செய்தார். அதன் பிறகு வேறு ஒரு நடிகையுடன் இருந்த தொடர்பின் காரணமாக அவரோடு ஓராண்டு வாழ்ந்து வந்தார். 

பின் அவரை மீண்டும் விவாகரத்து செய்துவிட்டு, தற்பொழுது பிரியாராமுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார். இதை மேற்கோள்காட்டி பேசியுள்ள நெட்டிசன்கள், பெண்கள் சுதந்திரம் பற்றியும், நாடகக் காதல் பற்றியும் பேசும் ரஞ்சித், தன்னுடைய திருமண வாழ்க்கையில் சரிவர இருக்கிறாரா என்பதை முதலில் தனக்குத்தானே பார்த்துக் கொண்டு, பின்பு பிறருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கூறி அவரை கடிந்து வருகின்றனர். 

விஜய்யின் த.வெ.க கல்வி விருது விழாவில் வித விதமான நா ருசிக்க மதிய உணவுப்பட்டியல்!!

click me!