
தமிழ் சினிமாவில் குற்றம் கடிதல், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட பல நல்ல தரமான படங்களை (JSK Films Corporation) தயாரித்து வழங்கியவர் தான் தயாரிப்பாளர் சதீஷ்குமார். படங்களின் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார். அண்மையில் அவருக்கு எதிராக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் சுகன் போத்ரா என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2016ம், தயாரிப்பாளர் சதீஷ்குமார், தன்னிடம் 2.6 கோடி ரூபாயை கடனாக பெற்றதாகவும். அதற்காக கடந்த 2017ம் ஆண்டு சதீஷ் வழங்கிய காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பியதாகவும் சுகன் கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுண் நான்காவது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஏ கே என் சந்திர பிரபா முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இது கோலிவுட்டில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
6 மாத சிறை தண்டனையோடு, தயாரிப்பாளர் சதீஷ் குமார், சுகனிடன் வாங்கிய கடன் தொகையை, வட்டியுடன் அவரிடம் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவால் கூறினார். பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.