Indian 2: ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !

Published : Jun 27, 2024, 09:16 PM IST
Indian 2: ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !

சுருக்கம்

திரையரங்குகளில் "இந்தியன் 2"  டிரெய்லர், கல்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வளரவேற்பை பெற்றுள்ளது.  

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள "கல்கி 2898 கிபி"  படத்துடன் "இந்தியன் 2" டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. 

இன்று  அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் "கல்கி 2898 கிபி" திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mr & Mrs Chinnathirai: மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்சியில் கலந்து கொள்ளும் 11 பிரபல ஜோடிகள்!

இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்றான "கல்கி 2898 கிபி" படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்,  அப்படத்துடன் “இந்தியன் 2” படத்தின் டிரெய்லர் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. மேலும் திரையரங்குகளில் டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், அமோக வரவேற்பு கொடுத்து, கொண்டாடி வருகின்றனர். 

மிகப்பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தியப் புராணக்கதையின் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக, உருவாகியிருக்கும் "கல்கி 2898 கிபி" திரைப்படம், இன்று உலகமெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரைப்படம் காணச்சென்ற ரசிகர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சியாக "இந்தியன் 2" டிரெய்லர் அமைந்துள்ளது. "கல்கி 2898 கிபி" திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் , மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில்,  இந்தியன் 2 டிரெய்லரும் அந்தந்த மொழிகளில் வெளியாகி இருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

Mr & Mrs Chinnathirai: மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்சியில் கலந்து கொள்ளும் 11 பிரபல ஜோடிகள்!

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தினை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.  இப்படம் உலகமெங்கும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிபிடித்தக்கது. 

இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்
சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?