ஒருவழியாக நயன்தாராவின் திருமண வீடியோ வெளியீடு குறித்த அப்டேட்டை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்! எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Aug 09, 2022, 01:42 PM ISTUpdated : Aug 09, 2022, 01:49 PM IST
ஒருவழியாக நயன்தாராவின் திருமண வீடியோ வெளியீடு குறித்த அப்டேட்டை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்! எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுருக்கம்

Nayanthara Marriage : முதன்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய புரோமோவை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பிரம்மாண்ட ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இவர்களது திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் இவர்களது திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதன் காரணமாகவே இவர்களது திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் ஒரு வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகாமல் உள்ளது.

இடையே நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே இவர்களது திருமண வீடியோவை அந்நிறுவனம் வெளியிடும் முடிவை கைவிட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் அது வதந்தி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன் - விக்கியின் ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டது.

இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல... அதற்குள் ஷங்கர் மகளுக்கு இவ்வளவு சம்பளமா..! வெளியான ஷாக்கிங் தகவல்

இந்நிலையில், முதன்முறையாக நயன்தாரா திருமணத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய புரோமோவை வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். அந்த வீடியோவில் நயன் மற்றும் விக்கி பேசும்படியான காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. அதில் ஒரு பெண்ணாக நயன்தாராவின், குணம் மற்றும் அவரது கேரக்டர் மிகவும் ஊக்கம் தரும் வகையில் இருந்ததாகவும், உள்ளேயும், வெளியேயும் மிகவும் அழகானவர் என்றும் நயன்தாராவை பற்றி பேசி உள்ளார் விக்கி.

                                                                                 

இந்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கி உள்ளார் என்பதையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த மாத இறுதியில் இந்த வீடியோ வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... புஷ்பா நாயகனுக்கு கிடைத்த அங்கீகாரம்... அமெரிக்காவில் இந்திய தேசிய கொடியுடன் வலம் வர உள்ள அல்லு அர்ஜுன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!