பிரமிக்கவைக்கும் நகையுடன் இளவரசிகள்...ஜுவல்லரி பார்ட்னர்களை அறிமுகப்படுத்திய பொன்னியின் செல்வன்

Published : Aug 08, 2022, 06:12 PM ISTUpdated : Aug 08, 2022, 06:13 PM IST
பிரமிக்கவைக்கும் நகையுடன்  இளவரசிகள்...ஜுவல்லரி பார்ட்னர்களை அறிமுகப்படுத்திய பொன்னியின் செல்வன்

சுருக்கம்

பொன்னியின் செல்வன் படத்தொகுப்பிலிருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் அணிகலன்களை அணிந்து கொள்ளுவது போன்ற புதிய ப்ரோமோ வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு தங்கள் நகைக்கூட்டாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கான உள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் இசைக்கலவை  முடிவுற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.  தற்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தொகுப்பிலிருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் அணிகலன்களை அணிந்து கொள்ளுவது போன்ற புதிய ப்ரோமோ வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு தங்கள் நகைக்கூட்டாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...தெலுங்கு கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயன்..ஓன் வாய்ஸில் தான் டப்பிங்காம்...

ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ஆகியோர் ஆடை அணிவது போன்ற பிடிஎஃப் காட்சிகள்  இந்த வீடியோவில் இடம்பெறுள்ளது. பொன்னியின் செல்வனில் குந்தவை வேடத்தில் திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சோழ வம்சத்தின் வரலாற்று காவிய நாடகமாகும். இதனால் நடிகர் மற்றும் நடிகைகளின் உடைகள் நகைகள் அரச குடும்ப உறுப்பினர்களுடன் பொருந்து வேண்டியது கட்டாயம். இந்த மாபெரும் திட்டத்தில் இணைந்துள்ள நகை கூட்டாளிகளை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் படம் வெளியீடு குறித்தும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கிராமத்து நாயகனாக அருண் விஜய்..யானை தமிழக ஷேர் எவ்வளவு தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு...'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய்,விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் முதல் சிங்கிள் பொன்னியின் நதி வெளியிடப்பட்டது. இரண்டாவது பாடல் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற படத்தின் டீசர் மட்டும் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!