இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் முத்தரசன் நடித்துள்ள 'அரிசி' படத்தின் படபிடிப்பு நிறைவு

Published : Mar 13, 2024, 02:13 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் முத்தரசன் நடித்துள்ள 'அரிசி' படத்தின் படபிடிப்பு நிறைவு

சுருக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி”  திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.  

மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார்  இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”.  இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு,  தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. 

நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது. நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் S.A.விஜயகுமார். 

Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இக்கால சூழலுக்கு எற்ப நடிகர் சமுத்திரக்கனி- யின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும்..

இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.  இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

KPY Bala: கல்லூரி விழாவில் காதல் திருமண மேட்டரை ஓப்பன் செய்த KPY பாலா! காதலி யார் தெரியுமா? குவியும் வாழ்த்து!

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்கிறார். நடனம் தினா மாஸ்டர், சண்டை பயிற்சி வீர் விஜய், சேது ரமேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்,டிசைன்ஸ் அஞ்சலை முருகன். மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P சண்முகம் தயாரிக்க, S. M.பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!
பிக் பாஸ் ஜூலிக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்; வருங்கால கணவர் யார்? திருமணம் எப்போது?