தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். கோலிவுட்டின் தளபதியாக கொண்டாடப்பட்டு வரும் விஜய், தற்போது அரசியலில் நுழைந்துள்ளதால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதனால் கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்பது தான் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
அடுத்த தளபதியாக துடிக்கும் நடிகர்கள் பட்டியலில் தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும் அதில் முதன்மையில் இருப்பவர் எஸ்.கே. தான். ஏனெனில் அவரது சமீப கால நகர்வுகளும் அந்த இடத்தை நோக்கி இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதன்படி விஜய் பட இயக்குனர்களுடன் அடுத்தடுத்து பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் இவர், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் ரஜினி படத்தையே பதம் பார்த்த மணிகண்டனின் ‘லவ்வர்’... ஓடிடிக்கு வருகிறது - எப்போ ரிலீஸ் தெரியுமா?
இந்த நிலையில், தான் அடுத்த தளபதி என்பதை ஆணித்தனமாக அறிவிக்கும் பொருட்டு சமீபத்தில் பிரம்மாண்ட பேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி அலப்பறை கிளப்பி இருக்கிறார் எஸ்.கே. சென்னையில் நடைபெற்ற இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதற்கு நிகரான வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கும் கிடைத்திருக்கிறது. இந்த ஃபேன்ஸ் மீட் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அடுத்த தளபதி இவர் தான் போலையே என முனுமுனுக்க தொடங்கி உள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் படையை திரட்டி கோலிவுட்டையே மிரள வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதையும் படியுங்கள்... விடிவி முதல் ராட்சசன் வரை... நடிகர் ஜெய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் மட்டும் இத்தனையா?