
கோலிவுட்டில் அதிக ட்ரோல்களை சந்தித்த இயக்குனர் என்றால் அது அட்லீ தான். அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் அவர் பிற படங்களில் இருந்து காட்சிகளை காப்பி அடித்து தன் படத்தில் வைத்துவிடுகிறார் என்பது தான். ஆனால் அட்லீ இந்த விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறார். கோலிவுட்டில் அவர் இயக்கத்தில் வெளிவந்த நான்கு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.
இதையடுத்து பாலிவுட்டுக்கு பறந்த அட்லீ, அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கினார். அவர் இயக்கத்தில் கடந்தாண்டு திரைக்கு வந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஜவான் படத்தின் வெற்றியால் தற்போது பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக உருவெடுத்து உள்ளார் அட்லீ.
இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ
தற்போது பேபி ஜான் என்கிற திரைப்படத்தை இந்தியில் தயாரித்து வரும் அட்லீ, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஹாலிவுட் படம் இயக்குவேன் என்றும் கூறியிருக்கிறார். இப்படி அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்ந்து வரும் அட்லீ, சமீபத்தில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது பாலிவுட்டின் டாப் ஹீரோஸ் அனைவரும் அட்லீக்கு ராஜமரியாதை அளித்த வீடியோ அண்மையில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது அட்லீயின் மற்றுமொரு வீடியோ வைரலாகி வருகிறது. அதன்படி அம்பானி வீட்டு விழாவின் போது அட்லீயை பார்த்த கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி அவரை கட்டிப்பிடித்து வரவேற்றதோடு, ஜவான் பட வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார். இப்படி வட இந்தியாவில் கொண்டாடப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ள அட்லீயின் வளர்ச்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... ஜாம்நகரில் ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த ப்ரீ வெட்டிங் விழா! அம்பானி மகனை வாழ்த்த படையெடுத்து வந்த பாலிவுட் Stars
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.