"அப்டேட் விடுடா".. தகாத வார்த்தையால் வெங்கட் பிரபுவை திட்டிய Netizen - மாஸ் ரிப்ளையால் அவரை OFF பண்ண இயக்குனர்

Ansgar R |  
Published : Mar 03, 2024, 09:52 PM IST
"அப்டேட் விடுடா".. தகாத வார்த்தையால் வெங்கட் பிரபுவை திட்டிய Netizen - மாஸ் ரிப்ளையால் அவரை OFF பண்ண இயக்குனர்

சுருக்கம்

Venkat Prabhu : தளபதி விஜய் அவர்கள் விரைவில் முழு நேர அரசியல் ஈடுபட உள்ள நிலையில், அவருடைய இறுதி இரண்டு திரைப்படங்களும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். டி ஏஜிங்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை மிகவும் இளமையாக இந்த திரைப்படத்தில் காட்டப் போகிறார்கள் என்கின்ற ஆர்வம் இப்போதிலிருந்தே அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்த திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் தளபதி விஜய் அவர்கள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர், நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருவது தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிக மிகப் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 

சூப்பர் அப்டேட் கொடுத்த சீயான் 62 படக்குழு.. ப்ராஜெக்டில் இணைந்த மாஸ் மலையாள நடிகர் - வெளியான போஸ்டர் இதோ!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு அவர்களிடம் கோட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்பொழுது வெளியாகும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் Too Early Bro என்று ரிப்ளை செய்திருந்தார். இந்நிலையில் நேற்று அவருடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு நெட்டிசன் நீங்கள் Too Early ஏ என்று சொல்லி ஒரு வாரம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு தகாத வார்த்தையையும் குறிப்பிட்டு "டே அப்டேட் கொடுடா" என்று கேட்டுள்ளார். இதற்கு சற்றும் கோவப்படாமல் ரிப்ளை செய்த் வெங்கட் "நான் சொல்லலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இனிமேல் எப்படி சொல்வது? என்று கூறி தளபதி ரசிகர்களை டேக் செய்து மாஸ் ரிப்ளை ஒன்றை கொடுத்து தகாத வார்த்தையில் திட்டிய அந்த நெட்டிசனின் வாயை அடைத்துள்ளார்.

"ஓரமா போய் நில்லுமா".. அம்பானி வீட்டு விஷேஷம்.. உடன் வந்த பணியாளரை ஓரம்போக சொன்ன ரஜினி - கடுப்பில் Netizens

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!