
வருகின்ற ஜூலை மாதம் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் மெர்ஜென்ட் அவர்களின் மகள் ராதிகா மெர்சண்ட்டை திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் தற்பொழுது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் தொடங்கி சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் நேரில் சென்று தங்களுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அவர்களுடன் வரும் வீட்டு பணியாளரும் சென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்படும் அந்த வீடியோவில் ரஜினிகாந்த் குடும்பத்தினரை போட்டோ எடுக்க அங்கிருந்தவர்கள் ஒன்று கூடிய பொழுது, அருகில் நின்ற அந்த வீட்டு பணியாளரை சற்று ஓரமாகப் போய் நிற்குமாறு ரஜினிகாந்த் கூறுகின்றார்.
ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மனைவி, மகளின் பொருட்களை சுமந்து வரும் அந்த பெண் அவர் அருகில் நிற்கக் கூடாதா? அவர்களோடு நீங்கள் போட்டோ எடுத்துக்கொள்ளமாடீர்களா? என்று ரஜினிகாந்தை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.