
நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், பிரபல தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஃபேமிலி ஸ்டார்'. குஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.
இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தில் இருந்து சார்ட்பஸ்டர் முதல் பாடல் 'நந்தனந்தனா' சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது.
அப்படி இருக்கும்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், படத்தின் டீசர் அறிவிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படமுழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.