இது பிசினஸ் ட்ரிப் மட்டுமல்ல.. மலேசியாவில் சாமி தரிசனம் செய்த நயன் மற்றும் விக்கி ஜோடி - வைரலாகும் வீடியோ!

Ansgar R |  
Published : Sep 28, 2023, 07:51 PM IST
இது பிசினஸ் ட்ரிப் மட்டுமல்ல.. மலேசியாவில் சாமி தரிசனம் செய்த நயன் மற்றும் விக்கி ஜோடி - வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

இன்று சினிமா துறையில் ஜொலிக்கு நட்சத்திரங்கள் பலர், மிகப்பெரிய தொழில் அதிபர்களாகவும் விளங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல நடிகை நயன்தாரா தற்போது 9 skins என்ற பெயரில் ஸ்கின் கேர் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களாவே நயன்தாரா ஒரு புதிய ஸ்கின் கேர் பிராண்ட் நிறுவனத்தை துவங்க ஆயத்தமாகி வந்தார். இதனையடுத்து அது குறித்த சில தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவ்வப்போது வெளியிட்டும் வந்தார். மேலும் அவரது இந்த தயாரிப்புகள் நாளை முதல் (29.9.2023) விற்பனைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோலாலம்பூரில் தங்களின் ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் நிறுவனத்தை அறிமுகம் செய்யவுள்ளனர். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த தொழிலதிபரான டெய்சி மோர்கனுடன் இணைந்து தற்போது இந்த வணிக முயற்சியில் நயன் மற்றும் விக்கி ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான சில தகவல்களின்படி இந்த நிகழ்வு நாளை செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தையும் இழந்த உலக நாயகன்.. நிதி நெருக்கடியால் சுருண்டு படுத்த டாப் 3 கோலிவுட் படங்கள் - லிஸ்ட் இதோ!

இந்த மாத தொடக்கத்தில் தான், நடிகை நயன்தாரா தனது ஸ்கின் கேர் பிராண்டான 9 ஸ்கின் குறித்த ஒரு டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட பதிவுகளில், "இன்று, எங்கள் ஆறு வருட அயராத முயற்சி மற்றும் அன்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்". "நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் பார்முலாக்கள் மற்றும் உங்கள் சுய-கவனிப்பு வழக்கத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளோம்" என்று அவர் கூறினார். 

 

இந்த சூழலில் தங்கள் வியாபாரத்தை வளர்க்க மலேசியா சென்றுள்ள நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அங்குள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில் உள்ள ஷா அலாம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் சித்தா பட ப்ரோமோஷன்.. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சித்தார்த் - பரபரப்பு வீடியோ இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்
விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி