அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள இறைவன் படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் இறைவன். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நடிகர் நரேன், விஜயலட்சுமி, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி போலீசாக நடித்துள்ளார். அதிகளவிலான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
டிரைலர் பார்த்து சில்லறையை சிதரவிட்ட மொமண்ட், இந்த படத்தை ராட்சசனோட கம்பேர் வேற, இறைவன் சலிப்பா இருக்குது நண்பா என மீம் உடன் தன்னுடைய விமர்சனத்தை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Trailer பார்த்து சில்லரைய சிதறவிட்ட மொமென்ட். 😵😵
இந்த படத்தை ராட்சசன் oda Comparison வேற.. pic.twitter.com/pnRpqM22jp
1வது பாதி வழக்கமானதாக இருந்தாலும் சரி, ஆனால் 2வது மிகவும் வலுவான ஆட்டம் இல்லாமல் விகாரமாக உள்ளது... நல்ல கருத்து உள்ளது என மற்றொரு நெட்டிசன் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1வது பாதி வழக்கமானதாக இருந்தாலும் சரி, ஆனால் 2வது மிகவும் வலுவான ஆட்டம் இல்லாமல் விகாரமாக உள்ளது... நல்ல கருத்து உள்ளது pic.twitter.com/kPF88RrvX0
— ❤️ லாவண்யா ✍️ ❤️ (@lavanya_teddy)இறைவன் நல்ல படம். வில்லனாக நடித்துள்ள ராகுல் போஸ் சரியான தேர்வு. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்கும் ஒர்க் ஆகி உள்ளது. பிரம்மாவை டீசண்டாக காட்டி உள்ளனர். இடைவெளிக்கு பின் படம் மிகவும் நீளமாக இருப்பது போல உள்ளது என பதிவிட்டுள்ளார்.
Gud stuff, was excellent cast, trippy bgm worked well.
Decent execution of
Felt lengthy after intermission.
One... Two... Three...
One... Two... Three...
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மட்டும் தான் இறைவன் படத்தை காப்பாற்றி உள்ளது. மற்றபடி சைக்கோ லெவல் வக்கிரம் நிரம்பிய முட்டாள்தனமான படம் இது என விமர்சித்துள்ளார்.
only saving element is yuvan background score.
Other than that the movie is a total crap filled with psycho level pervertism . It's a total clueless pathetic crap.
டிரைலரை பார்த்து படம் நல்லா இருக்கும்னு நினைக்காதீங்க. இறைவன் ரொம்ப போர் என வடிவேலுவின் மீம் உடன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
Don't judge a movie by it's trailer!! less connect 😕 pic.twitter.com/4zavFhF19t
— Iam_surya (@SuryaYuva2tn)இதையும் படியுங்கள்... சூப்பரா... சுமாரா? ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ