பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதுகுறித்த எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் சந்திரமுகியும் ஒன்று. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தை பி வாசு இயக்கி இருந்தார். மேலும் நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, நாசர், வடிவேலு, வினீத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாகவும், கங்கனா ரனாவத் சந்திரமுகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. லைகா நிறூவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து உள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள சந்திரமுகி 2 படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதை பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சூப்பரான திரைக்கதை மற்றும் திகிலூட்டும் காட்சிகளுடன் சந்திரமுகி முதல் பாகத்திற்கு இணையாக அதன் இரண்டாம் பாகமும் உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் டான்ஸ் வேறலெவல், லட்சுமி மேனனும், கங்கனா ரனாவத்தும் தான் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
Finished watching
It is on par with its predecessor 💖 with great screenplay and good jumpscares
Climax dance is INSANE
Showstealers:
Lakshmi Menon
Kangana Ranaut
Rating: 3.75/5 pic.twitter.com/z4R4vC3rc5
பி வாசு மற்றும் கீரவாணியின் உலகம் தான் சந்திரமுகி 2. ராகவா லாரன்ஸ், மகிமா நம்பியார், ராதிகா சரத்குமார் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். வடிவேலு தனது மேஜிக்கை மீண்டும் கொண்டுவந்துள்ளார். கங்கனா ரனாவத் இரண்டாம் பாதியில் வந்தாலும் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
review !!!! It is a world of p vasu and keeravani. . , mahima , kids and Radhika did justice to the plot , Vadivelu brings his magic back !!!! arrives in second half with her magnetic screen presence!!! She is completely ruling !!
⭐️⭐️⭐️⭐️ pic.twitter.com/9rsokRXZSI
சந்திரமுகி 2 அருமையான படம். ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத்தின் காட்சிகளும் நன்றாக உள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூடிய மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படமாக சந்திரமுகி 2 உள்ளது. படத்தில் நிறைய கூஸ்பம்ஸ் காட்சிகள் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Review
3.5/5🌟🌟🌟✨
Wonderful😊 did too well. He rocked it!! Sequences are good. She's a brilliant actress.
Plot is good along with an engaging screenplay.
Mass entertainment.
Many goosebumps moments 🔥🔥
Don't think, just watch it. pic.twitter.com/TkZk6Nefrb
முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமையாக உள்ளது. குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. சந்திரமுகியாக நடிக்க கங்கனா ரனாவத் கச்சிதமான தேர்வு, இரண்டாம் பாதி முழுக்க அவரின் ராஜ்ஜியம் தான். லட்சுமி மேனனுக்கு இது சிறந்த கம்பேக் படம். சந்திரமுகி மற்றும் வேட்டையனுக்கு இடையேயான காட்சிகள் நன்றாக உள்ளன. கடைசி அரை மணிநேர கிளைமாக்ஸ் வெறித்தனமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Finally done with 2nd half too ..!!
2nd half is solid than 1st half..🤟🤟🤟
Flashback scenes of Chandramukhi very well made🔥.! as is the show stealer for 2nd half of the film..!! Perfect casting⭐️💥 perfect comeback and…
ஒரு வரில சொல்லனும்னா பைசா வசூல் பேமிலி எண்டர்டெயின்மெட் படம் தான் சந்திரமுகி 2. நிச்சயமாக ஹிட் ஆகிவிடும். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி அருமையாக உள்ளது. திரைக்கதை, திகில் காட்சிகள், பாடல்கள், பின்னணி இசை ஆகியவை சிறப்பாக இருக்கிறது. விஎப் எக்ஸ் மட்டும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
Review:
One word: Fascinating , Rocking paisa vasool family entertainer..!! A sure shot bullet HIT💪💪
Rating : ⭐️⭐️⭐️💫 3.5/5
2nd half >>>>>> >> 1st half
Good screenplay📽️,few Jump scaring moments, VFX could have been better, Songs are fine, BGM is good… pic.twitter.com/XI3LK6PKmT
இதையும் படியுங்கள்... ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன? ஆட்சியவே புடிச்சிட்டா . . . விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்