Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ

Published : Sep 07, 2023, 08:36 AM ISTUpdated : Sep 07, 2023, 08:54 AM IST
Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ

சுருக்கம்

Jawan movie Twitter Review in Tamil : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்த அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளதோடு தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தும் உள்ளார். ஜவான் இந்திப் படமாக இருந்தாலும், இதில் தமிழ் சினிமாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. 

அட்லீ தொடங்கி அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு என மிகப்பெரிய கோலிவுட் படையையே இப்படத்தில் இறக்கிவிட்டு அழகுபார்த்துள்ளார் அட்லீ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டிலும் இப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜவான் படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்.... அட்லீயை அட்டாக் பண்ண இத்தனை பேரா... இந்த வாரம் ஜவானுடன் மல்லுக்கட்ட தமிழில் இம்புட்டு படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

ஜவான் என்ன ஒரு அருமையான படம். ஷாருக்கான் ஒரு மாஸ்டர்பீஸ் படத்தை கொடுத்துள்ளார். கூஸ்பம்ப் காட்சிகள் நிறைந்த படமாக ஜவான் உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பு ரொம்ப நல்லாயிருக்கு. அனிருத்தின் பின்னணி இசை திரையரங்குகளை அதிரவைக்கிறது. இயக்குனர் அட்லீக்கு தரமான கம்பேக் படம். சந்தேகமே வேண்டாம் ஷாருக்கான் தான் பாலிவுட்டின் கிங் என பதிவிட்டுள்ளார்.

ஜவான் முதல் பாதி சூப்பர். குறிப்பாக சண்டைக் காட்சிகள் அனல்பறக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தான். ஷாருக்கானின் பிளாஷ்பேக் வேறலெவல். நயன்தாரா எண்ட்ரி, விஜய் சேதியின் நடிப்பு பங்கமாக உள்ளது. விஜய் கேமியோ இல்லை. அதே போல் எந்தபடத்தில் சாயலும் இல்லை இது தான் ஜவான் படத்தின் பிளஸ். நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜவான் பிளாக்பஸ்டர். ஸ்டார் பவர், ஸ்டைல், பாடல்கள், பிரம்மாண்டம், சர்ப்ரைஸ் கேமியோ என அனைத்தும் கலந்த மாஸ் படமாக ஜவான் உள்ளது. 2023-ம் ஆண்டில் ஷாருக்கானுக்கு இரண்டாவது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக ஜவான் அமைந்துள்ளது. அட்லீ அண்ணா நீ ஜெயிச்சுட்ட என பதிவிட்டு இருக்கிறார்.

ஜவான் முழுக்க முழுக்க ஷாருக்கானின் மாஸான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். அதோடு ஸ்ட்ராங் ஆன எமோஷனல் டச்சும் படத்தில் உள்ளது. உறுதியாக இது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். யாராலும் இதை தடுக்க முடியாது என மார்தட்டி சொல்லி இருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.

ஜவான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம். ஷாருக்கானை படத்தில் அட்லீ காட்டியுள்ள விதம் அருமையாக உள்ளது. பின்னணி இசை தெறிக்கிறது. ஜவான் மாஸ் தான் என அன்பைப் பொழிந்திருக்கிறார்.

புது கதைக்களம் இல்லை என்றாலும் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் அருமையாக உள்ளது. ஷாருக்கானுக்கு 2வதுப் 1000 கோடி லோடிங். விஜய் சேதுபதி கேரியரில் இதுதான் அவருக்கு சிறந்த வில்லன் கதாபாத்திரம். நயன்தாரா திரையில் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார். தீபிகா படுகோனேவின் சண்டைக் காட்சியில் மெர்சலாக்கி உள்ளார் என பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்.

மேற்கட்ட விமர்சனங்களை பார்க்கும் போது இயக்குனர் அட்லீ, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாலிவுட்டில் இறக்கிவிட்டார் போல தெரிகிறது. இப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்.... 'ஜெயிலர்' படத்தில் இருந்து... தமன்னாவின் ஐட்டம் பாடலான காவாலா வீடியோ சாங் வெளியானது!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?