மும்பையில் லேண்ட் ஆனார் மகா கும்பமேளா பிரபலம் மோனாலிசா!!

Published : Feb 07, 2025, 02:57 PM IST
மும்பையில் லேண்ட் ஆனார் மகா கும்பமேளா பிரபலம் மோனாலிசா!!

சுருக்கம்

மகா கும்பமேளாவில் மாலை விற்ற மோனாலிசா 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 

மகா கும்பமேளாவில் மாலை விற்று வைரலான மோனாலிசா 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் இருந்து படத்தில் நடிப்பதற்காக மும்பைக்கு வருமாறு மோனாலிசாவுக்கு இயக்குனர் அழைப்பு விடுத்து இருக்கிறார். மும்பைக்கு செல்வதற்கு முன்பு மோனாலிசா சோசியல் மீடியா 'எக்ஸ்' தளத்தில் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். 

சோசியல் மீடியாவில் மோனாலிசா போஸ்ட் 

மோனாலிசா 'எக்ஸ்'- தளத்தில் ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார். அதுல, "இன்னைக்கு மும்பைக்குப் போறேன், அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன். முதல் தடவையா வீட்டை விட்டு இவ்வளவு தூரம் போறேன். நான் என் கனவை நனவாக்கணும்னு நீங்க எல்லாரும் எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க' என்று குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுடன் செல்பி எடுக்க டார்ச்சர் செய்த இளசுகள் ! | பரபரப்பு காட்சி !

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளாக மோனாலிசா

மோனாலிசா 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளா நடிக்கிறார். இந்தக் கதையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளோட கனவு ராணுவத்துல சேரணும் என்பது. அதற்காக ரொம்ப கஷ்டப்படுகிறார். இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, "மோனாலிசாதான் இந்தக் கதாபாத்திரத்துக்கு சரியான ஆள். மகா கும்பமேளா வைரல் வீடியோவில் மோனாலிசாவைப் பார்த்தேன். எனக்கு புது முகம்தான் தேவைப்பட்டது. மோனாலிசாவோட முன்னேறணும் என்கிற ஆர்வமும், பொறுமையும்தான் அவங்களுக்கு இந்தப் படத்தை ஆஃபர் செய்ய வைத்தது. நானே அவங்க கிராமத்துக்கு சென்று படத்தில் நடிக்க வைக்க ஒப்புதல் வாங்கினேன். கிராமத்துலயே இருந்து நடிப்புப் பயிற்சி கொடுக்க என்னோட டீமை அனுப்பினேன். ஆனா, அங்க வேலை செய்ய ரொம்பக் கஷ்டமாக இருந்தது. வகுப்புகள் சரியாக நடக்கவில்லை.  அதனாலதான் மோனாலிசாவை மும்பைக்குக் வரக் கூறினோம்” என்று தெரிவித்துள்ளார். மோனாலிசாவைத் திரையில் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

மோனாலிசா நடிப்பது போன்று, நடனம் ஆடுவது போன்று பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அவை அனைத்தும் செயற்கை தொழில்நுட்பத்தில் தயாரான வீடியோக்கள் என்று தெரிய வந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!