life-style
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளா 2025 சாதுக்கள் மற்றும் பக்தர்களால் நிறைந்துள்ளது. இந்த திருவிழாவில், ஒரு சாதாரண பெண் தனது அழகால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தூரைச் சேர்ந்த கருமையான நிறம், கூர்மையான மர்மமான கண்களால் மக்களை கவர்ந்து வருகிறார். சமூக ஊடகங்களில் மக்கள் அவரை "மகா கும்ப மோனாலிசா" என்று அழைக்கிறார்கள்.
பாரம்பரிய உடை மற்றும் குறைந்தபட்ச ஒப்பனையில் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பலரும் அவரை உலகப் புகழ்பெற்ற மோனாலிசாவுடன் ஒப்பிட்டுள்ளனர்.
மகா கும்பத்தில் மாலை விற்பனை செய்து தன் குடும்பத்தினருக்கு வருமானம் ஈட்டி வருகிறார். தனது குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவே இங்கு வந்ததாக கூறுகிறார்.
மகா கும்பத்தில் ஹர்ஷா ரிச்சாரியாவைப் போல, மோனாலிசாவும் தனது அழகான கண்கள் மற்றும் பாரம்பரிய தோற்றத்திற்காக வைரலாகி வருகிறார். இருவரின் கண்களையும் மக்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
மோனாலிசாவின் எளிமை, அழகு மகா கும்பமேளா 2025 -ல் பேசுபொருளாக மாறியுள்ளது. மாலை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், தனது அழகால் புதிய ஒளியைப் பரப்புகிறார்.