life-style
ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுலோச்சனா தனது 21வது வயதில் 2021 ஆம் ஆண்டில் முதல் முறையாக தேர்வெழுதி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
சுவாதி மீனா 2007 இல் தனது முதல் முயற்சியிலேயே 22 வயதில் தேர்வு எழுது வெற்றி பெற்றார். தற்போது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிகாரியாக உள்ளார்.
உ.பி.யின் பிரயாக்ராஜைச் சேர்ந்த அனன்யா சிங் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று 51வது ரேங்க் பெற்றார். இவர் 2019 பேட்ச் IAS அதிகாரி.
IAS ஸ்மிதா சபர்வால் 22 வயதில் தேர்வில் தேர்ச்சி பெற்று IAS ஆனார்.
IAS டினா டாபி 22 வயதில் தேர்ச்சி பெற்றார். தற்போது பார்மரில் கலெக்டராக உள்ளார். 2016ல் தேர்வெழுதி முதலிடம் பிடித்தார். இவரது கணவரும் ராஜஸ்தானில் கலெக்டராக உள்ளார்.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தைச் சேர்ந்த சிமி கரன் 2019 பேட்ச் IAS. 22 வயதில் UPSC தேர்வில் 31வது ரேங்க் பெற்றார்.
ரியா டாபி, IAS டினா டாபியின் தங்கை, 2020ல் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று 15வது ரேங்க் பெற்றார். இவர் ராஜஸ்தான் கேடர் அதிகாரி.
ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தைச் சேர்ந்த IAS அதிகாரி ஐஸ்வர்யா ஷியோரன், தனது முதல் முயற்சியிலேயே UPSCயில் தேர்ச்சி பெற்றார். மருத்துவமும் படித்துள்ளார்.