Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்

Published : Jul 23, 2022, 01:30 PM ISTUpdated : Jul 23, 2022, 02:10 PM IST
Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்

சுருக்கம்

Suriya Birthday : மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில்  சில பிறந்தநாள் பரிசுகள் விலை  மதிப்பெற்ற தற்செயல் நிகழ்வுகள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  அன்புள்ள சூர்யா என வாழ்த்து உள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா, கார்த்திக் இருவரும் நாயகர்களாக உள்ளனர். கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த சூர்யா தற்போது தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இரண்டு தேசிய விருதுகள், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வாழ்நாளில் குவித்துள்ளார். அதோடு இந்திய பிரபலங்களின் பட்டியலில் 100 பேரில் ஒருவராக சூர்யா திகழ்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...வாழ்த்து பெற வந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.... சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சர்யப்படுத்திய ரஜினி

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யாவிற்கு நந்தா படம் ஒரு சரியான திருப்பு முனையாக அமைந்தது.. இந்த படத்தை பாலா இயக்கி இருந்தார்.இதில் சூர்யா மாறுபட்ட தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதை தொடர்ந்து வித்யாசமான கதைக்களங்கள் சூர்யாவிற்கு கைகொடுக்க காக்க காக்க திரைப்படத்தில் ஸ்ட்ரிட் போலீசாக நடித்து கவர்ந்தார்.  இந்த படத்தில் சூர்யா- ஜோதிகா இணைந்து நடித்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன்இயக்கி இருந்த காக்க காக்க படத்தை தொடர்ந்து  அதே ஆண்டு வெளியான பிதாமகன் சூர்யாவின் மற்றொரு கோணத்தை காட்டியிருந்தது. மீண்டும் பேரழகனில் இரட்டை வேடத்தில் நடித்த இவர் அந்த படத்திற்கான விருதுகளையும் பெற்றிருந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. அதில் மறதி நோயால் பாதிக்கப்பட்ட  மனிதராக தோன்றியிருப்பார்.  அயன் இந்த படத்தில் கடத்தல்காரனாகவும் பின்னர் போலீஸ் வேடத்திலும் நடித்திருப்பார். பின்னர் சிங்கம் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் செய்திகளுக்கு.... இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா... தி கிரே மேன் படம் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

2011 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைக் கதையான ஏழாம் அறிவு சூர்யாவிற்கு மிகப்பெரிய ஒரு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 24 என்ற படத்தில் மூன்று வேடத்தில் தோன்றினார் சூர்யா பின்னர் போதுமான வெற்றிகளை சுவைக்காத சூர்யாவிற்கு சூரரைப் போற்று  ஒரு சிறந்த கதை களத்தை கொடுத்து விருதுகளையும் குவித்துள்ளது. அதேபோல ஜெய்பீம் இன்ரு வரை பாராட்டுகளை பெரும் ஒரு கதைக்களமாக உலா வருகிறது. இறுதியாக எதற்கும் துணிந்தவன் தற்போது பாலா உடன் வணங்கான், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார் சூர்யா.
 
இந்நிலையில்  இவருக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில்  சில பிறந்தநாள் பரிசுகள் விலை  மதிப்பெற்ற தற்செயல் நிகழ்வுகள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  அன்புள்ள சூர்யா என வாழ்த்து உள்ளார்.

 

அதேபோல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் உங்கள் வாழ்வில்  ஞானம், அரவணைப்பு மற்றும் வெற்றிகளை சேர்க்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.... யம்மாடியோ... குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை இத்தனை லட்சமா..!

 

 மம்முட்டி தன் பதிப்பில் நேஷனல் அவார்டு ஒரு அழகான பிறந்தநாள் பரிசு எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

 

 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தேசிய சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற என் அன்பான சூர்யா அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி பிறந்தநாளில் முன்னிட்டு விருது வருவது இன்னும் சிறப்பு என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

 

 

அதேபோல இயக்குனர் பாண்டியராஜ் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அவார்ட் வாங்கியதற்கான வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்
சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?