பணம் புகழ் எல்லாமே இருக்கு.. ஆன சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம்கூட இல்ல.. நொந்துபோய் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி.

Published : Jul 23, 2022, 09:20 AM ISTUpdated : Jul 23, 2022, 09:25 AM IST
பணம் புகழ் எல்லாமே இருக்கு.. ஆன சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம்கூட இல்ல.. நொந்துபோய் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி.

சுருக்கம்

வாழ்க்கையில் பணம் புகழ் எல்லாம் இருந்தும் சந்தோஷம் இல்லை என்றும் ஏன் என்றால் சந்தோஷம், நிம்மதி என்பது எவருக்கும் நிரந்தரம் கிடையாது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 

வாழ்க்கையில் பணம் புகழ் எல்லாம் இருந்தும் சந்தோஷம் இல்லை என்றும் ஏன் என்றால் சந்தோஷம், நிம்மதி என்பது எவருக்கும் நிரந்தரம் கிடையாது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ஆன்மீக படங்களில் நடித்த நான்  சினிமா நடிகராகவே இன்றும் இருக்கிறேன், ஆனால் எனது படங்களை பார்த்துவிட்டு எனது ரசிகர்கள் பலர் துறவிகளாக மாறிவிட்டார்கள், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என அவர் கூறியுள்ளார். உடல்நலம் காரணத்தால் கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது  வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை, மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் அரசியல் நோக்கத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார். இது அப்போது அவரது  ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வில் இருந்து வந்தார்,பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்தார், இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில்  யோகாத  சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோக மூலம் இனிய வெற்றியான வாழ்வு என்ற  தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதையும் படியுங்கள்:  ‘நடிப்பின் நாயகன்’ சூர்யாவுக்கு முதல் தேசிய விருது... எட்டுத்திக்கிலும் இருந்து குவிந்த வாழ்த்து மழை

அதில் அவர் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் அவர் பேசியதாவது,  என்னை பெரிய நடிகர் என்று எல்லோரும் சொன்னார்கள், இது எனக்கு பாராட்டா அல்லது விமர்சனமா என்று தெரியவில்லை, நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் மனதிருப்தி கொடுத்த இரண்டு படங்கள் ராகவேந்திரா, பாபா தான், இந்த இரண்டு படங்களிலும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்த மகான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்கு பிறகுதான் ராகவேந்திர சுவாமிகள் குறித்து பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது, இப்படி ஒரு மகான் இருந்தாரா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அதேபோல் பாபாவை பலரும் அறிந்து கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்: நாம ஜெயிச்சுட்டோம் மாறா... தேசிய விருது வென்றதும் கேக் வெட்டி கொண்டாடிய சுதா கொங்கரா - வைரலாகும் போட்டோஸ்

படத்துக்குப் பின்னர் நிறைய பேர் இமயமலைக்கு சென்று பாபா குகைக்கு போனதாக கேள்விப் பட்டேன், ஆனால் அதிகம் பேர் இங்கு வருவதால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அந்த படங்களில் நடித்த நான் இன்னும் நடிகராகவே இருக்கிறேன், ஆனால் எனது படங்களை பார்த்த எனது ரசிகர்கள் பலர் துறவியாகி விட்டார்கள், அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை கொள்கிறேன். இமயமலை என்பது சாதாரண விஷயம் அல்ல அங்கு பல மூலிகைகள் இருக்கிறது, அந்த மூலிகைகள் சாப்பிட்டால்  ஒருவாரத்திற்கு சாப்பிடவே தேவை இல்லை உடலுக்குத் தேவையான எல்லா ஆற்றல் சக்திகள் கிடைத்துவிடும்.

உடல் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு ரொம்ப முக்கியம், மருத்துவமனைக்கு செல்லாமலேயே நன்றாக நடமாடிக் கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விடவேண்டும், நான் கூட பலமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறேன், பணம், புகழை சேர்த்து வைத்துவிட்டு போவதை விட போகும்போது நோயாளியாக இல்லாமல் போவதுதான் முக்கியம். அது அனைவருக்கும் கொடுத்துவிடும், நான் கூட பணம் புகழ் பெரிய அரசியல்வாதிகள் என எல்லாரையும் பார்த்துவிட்டேன், ஆனால் சந்தோஷம் என்பது 10% கூட கிடையாது, ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி என்பது யாருக்குமே நிரந்தரமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்