
நடிகர் சூர்யா வசந்த சாய் இயக்கிய நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவரது தந்தை சிவக்குமார் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், தன்னுடைய விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி இன்று சூர்யா என்றாலே தரமான நடிகர் என சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
இவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இவருக்கு தேசிய விருது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. நந்தா, பிதாமகன், வாரணம் ஆயிரம் என பல்வேறு தரமான படங்களில் நடித்தும் நூலிழையில் அந்த வாய்ப்பு தவறிப்போனது. தற்போது சூரரைப்போற்று படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்று தான் ஒரு ‘நடிப்பின் நாயகன்’ என்பதை நிரூபித்து காட்டி உள்ளார் சூர்யா.
இதையும் படியுங்கள்... தேசிய விருதால் பெருமகிழ்ச்சி! ஜோவிற்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்- சூர்யா நெகிழ்ச்சி
நடிகர் சூர்யா மட்டுமின்றி அவர் நடித்த சூரரைப்போற்று படத்துக்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத படமாக சூரரைப் போற்று மாறி உள்ளது. அப்படக்குழுவிற்கும், நடிகர் சூர்யாவிற்கும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மலையாள நடிகர் மம்முட்டி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர்கள் கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், சரத்குமார், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், அரசியல் பிரமுகர்கள் கனிமொழி, சீமான், அண்ணாமலை என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் முழு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... நாம ஜெயிச்சுட்டோம் மாறா... தேசிய விருது வென்றதும் கேக் வெட்டி கொண்டாடிய சுதா கொங்கரா - வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.