தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப்பர்களை வியந்து பாராட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற யூடியூப் சேனல்களில் வில்லேஜ் குக்கிங் சேனலும் ஒன்று. கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பாரம்பரிய முறைப்படி விதவிதமான உணவுகளை சமைத்து வெளியிடுவதே இவர்களது ஸ்பெஷல். இந்த யூடியூப் சேனல் மிகவும் பாபுலர் ஆனது கடந்த 2021-ம் ஆண்டு தான். அப்போது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, இவர்களுடன் உணவு சமைத்து அதை சுவைத்து மகிழ்ந்தார்.
அதன்பின்னர் அசுர வளர்ச்சி அடைந்த வில்லேஜ் குக்கிங் சேனல், தமிழ்நாட்டில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஆகினர். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டபோது வில்லேஜ் குக்கிங் சேனலை பாராட்டி பேசி இருந்தார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஹார்ட்டிஸ்க் கிடைச்சதா? ரஜினி மகள் போட்ட ஒரே ஒரு இன்ஸ்டா பதிவு... ரவுண்டு கட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், நிதியாண்டு முடிவுக்கு வரும் சமயத்தில் ஆடிட்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் மீட்டிங் ஒன்றில் கலந்துகொண்டாராம் சிரஞ்சீவி. அப்போது அவர்கள் டெக்னிக்கலாக சிலவற்றை பேச, அது தனக்கு சுத்தமாக புரியாததால், சைலண்டாக போனை எடுத்து தன்னுடைய மகள் தனக்கு சிபாரிசு செய்த வில்லேஜ் குக்கிங் சேனலை மீட்டிங் சமயத்தில் பார்த்துக் கொண்டிருந்ததாக சிரஞ்சீவி கூறினார்.
அதில் அவர்கள் எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ என வரவேற்கும் விதம் அருமையாக இருந்ததாகவும் சிலாகித்து பேசி இருந்தார் சிரஞ்சீவி. இதில் வேடிக்கை என்னவென்றால் சிரஞ்சீவி சமையல் வீடியோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, அவரது குழுவினரோ அவர் மீட்டிங் குறித்து ஏதேனும் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என நினைத்தார்களாம். அவரின் இந்த பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. சிரஞ்சீவியின் இந்த பாராட்டுக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Annayya about Influencers, Even Im Watching reels
Boss says he watches Tamil Village Cooking Channel and imitates their signature welcome phrase 'Ellaru Vanga, Always welcomes you' Boss timing 👌 given Best wishes to Influencers pic.twitter.com/POlI7tPkV8
இதையும் படியுங்கள்... April Updates : கோட் பர்ஸ்ட் சிங்கிள் முதல் தலைவர் 171 டைட்டில் வரை... கோலிவுட்டின் ஏப்ரல் மாத அப்டேட்ஸ் இதோ