VJ Archana New Car : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தான் தொகுப்பாளினி அர்ச்சனா. சுமார் 25 ஆண்டுகளாக அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள், கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல ஜெயா டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கினார். அதன் பிறகு 2000வது ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காமெடி டைம்" என்கின்ற நிகழ்ச்சி தான் இவரை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தது.
சுமார் 7 ஆண்டுகள், "காமெடி டைம்" மற்றும் "இளமை புதுமை" ஆகிய இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா, கடந்த 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய "கலக்கப்போவது யாரு" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு பல முன்னணி சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளினியாக கடந்த 25 ஆண்டுகளாக அவர் பயணித்து வருகிறார்.
இன்றளவும் ஆங்கராக வேண்டும் என்கின்ற கனவோடு வலம் வரும் பலருக்கு, ஒரு சிறந்த ரோல் மாடலாக திகழ்ந்து வருகின்றார் அர்ச்சனா என்றால் அது மிகையல்ல. தற்பொழுது இவருடைய மகள் சாரா வினித் அவர்களும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் சாரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் இணைந்து நெல்சனின் டாக்டர் படத்தில் நடித்திருந்தனர்.
அர்ச்சனா அவர்கள் "வைகை எக்ஸ்பிரஸ்", "ஆடை", "நான் சிரித்தால்" மாற்றும் "டாக்டர்" போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய 25 ஆண்டுகால கனவு பலித்து விட்டது என்றும், என் தந்தையிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று உரக்க கத்தும் தருணம் வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.
தொகுப்பாளி அர்ச்சனா பிரபல பென்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு புத்தம் புது காரை வாங்கியுள்ளார். இந்த நிகழ்வில் தனது மகள், கணவன் மற்றும் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று அந்த காரை அவர் வாங்கி இருக்கிறார். Mercedes benz நிறுவனத்தின் glc 220d என்ற காரை தான் அவர் வாங்கியுள்ளார். இந்த காரினுடைய ஆரம்ப விலை சுமார் 77 லட்சம் ரூபாய்.அர்ச்சனா வாங்கி இருக்கும் இந்த மாடல் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை விலை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.